ஆதனவரி செலுத்துவதற்கான நடமாடும் சேவை (19.09.2023)

19.09.2023 காலை 9.00 மணி தொடக்கம் மாலை 3.00 மணிவரை உக்குளாங்குளம் கிராம அபிவிருத்திச்சங்க கட்டடத்தில் எமது சபையால் நடமாடும் சேவை நடாத்தப்பட்டது. இந்த நடமாடும் சேவையில் உக்குளாங்குளம் கிராம மக்கள் நிலுவையாகவுள்ள தமது ஆதனவரியினை செலுத்தியதோடு மானிய விலையில் எம்மிடம் குப்பைக்கொள்கலன்களையும் கொள்வனவு செய்தனர்.

வாகன சுத்திகரிப்புநிலையம் மற்றும் இயந்திரவியல் முற்றம் திறப்புவிழா

உள்ளூர் பொருளாதார அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக வறுமை மட்டத்தை குறைத்தல் எனும் கருப்பொருளின் கீழ் இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனம்,பொதுநலவாய உள்ளூராட்சி மன்றங்களின் இணையம்,ஐக்கிய இராச்சியத்தின் சர்வதேச அபிவிருத்தி திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையால் பேயாடிகூழாங்குளத்தில் நிர்மாணிக்கப்பட்ட வாகன சுத்திகரிப்புநிலையம் மற்றும் இயந்திரவியல் முற்றம் ஆகியன 18.08.2023 பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டன.

 

இந்த வாகனசுத்திகரிப்பு நிலையம் மற்றும் இயந்திரவியல் முற்றம் ஆகியன உருவாக்கம் பெறுவதற்கு காரணகர்த்தாவாக இருந்த மறைந்த எமது சபையின் முன்னாள் தவிசாளர் கௌரவ.துரைச்சாமி-நடராஜசிங்கம் அவர்களை இந்த நேரத்தில் நாம் நன்றிகளுடன் நினைவு கூருகின்றோம்.

 

அத்துடன் இந்த வாகன சுத்திகரிப்பு நிலைய செயற்றிட்டத்திற்கான நிதியீட்டத்தினை பெற்றுக்கொள்வதற்கு எமக்கு உறுதுணையாக நின்ற இலங்கை உள்ளூராட்சி மன்ற இணையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.சண்முகராஜா அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.  


 

தேசிய வாசிப்புமாத பரிசளிப்பு விழா-2023

எமது சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வாசிப்பு மாதத்தின் இறுதிநிகழ்வான பரிசளிப்புவிழா 08.11.2023 அன்று நெளுக்குளத்தில் அமைந்துள்ள சண் திருமண மண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது. இப்பரிசளிப்பு விழாவில் எம்மால் நடாத்தப்பட்ட வாசிப்புமாத போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள் பரிசில்களை பெற்றுக்கொண்டனர். அத்துடன் இந்நிகழ்வின் விசேட அம்சமாக அரங்காலயா நாடக நிறுவனத்தினரால் அரங்கேற்றப்பட்ட "துயரோசை" நாடகம் அனைவரது மனதையும் கவர்ந்தது.