எமது சபையால் 2022 ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்ட அபிவிருத்தித்திட்டங்களிலிருந்து உலகவங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் உள்ளூர் அபிவிருத்தி உதவித்திட்டத்தின்(LDSP) கீழ் 2023/2024 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைகள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்கான முதலாவது கூட்டம் 25.09.2023 திங்கட்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு எமது சபை சபா மண்டபத்தில் சபை செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டு தமது கருத்துக்களை வழங்கினர்.
இக்கூட்டத்திற்கு வருகைதர தவறியோர் எதிர்வரும் 30.09.3023 பிற்பகல் 2.00 மணிக்கு எமது சபை சபாமண்டபத்தில் நடைபெறும் இரண்டாவது கூட்டத்தில் கலந்துகொண்டு தமது கருத்துக்களை தெரிவிக்க முடியும் என்பதையும் அறியத்தருகின்றோம்.

எமது சபையால் வருடாவருடம் கொண்டாடப்படும் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு 23.09.2023 சனிக்கிழமை எமது சபைக்குட்பட்ட முன்பள்ளிகள்இகனிஷ்ட மற்றும் உயர்தர பாடசாலை மாணவர்களுக்கிடையில் வாசிப்பு திறனை மேம்படுத்தும் போட்டிகள் வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றன.
அந்த வகையில்
1)நிறந்தீட்டல் போட்டி
2)ஆத்திசூடி கூறல் போட்டி
3)வாசிப்புப்போட்டி
4)கவிதைப்போட்டி
5)கட்டுரைப்போட்டி
6)பொதுஅறிவுப்போட்டி
ஆகிய போட்டிகள் எம்மால் மாணவர்களுக்கு நடாத்தப்பட்டது.
இந்த வாசிப்புமாத போட்டிகளில் ஏராளமான மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.



வருடா வருடம் செப்ரம்பர் மாதம் 16 ஆம் திகதி உலகெங்கும் கொண்டாடப்படும் தூய்மைப்படுத்தல் தினத்தினை முன்னிட்டு எமது சபையினால் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் போன்ற உக்காத கழிவுகளை சேகரித்து சுற்றாடலை தூய்மையாக்கும் சிரமதானப்பணியானது 21.09.2023 அன்று ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.
இந்த தூய்மையாக்கும்பணியில் எமது சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள்இமத்திய சுற்றாடல் அதிகார சபை உத்தியோகத்தர்கள்இ வவுனியா பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் கலைவாணி சனசமூக நிலையத்தினர் கைகோர்த்திருந்தனர்.
இவர்கள் இந்த தூய்மையாக்கல் பணிக்கு வழங்கிய பூரண ஒத்துழைப்பிற்கு சபை சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்
அந்த வகையில் இன்றைய தினம் தாண்டிக்குளம் சந்தி தொடக்கம் ஓமந்தை பொலிஸ்நிலையம் வரையுள்ள யு9 பிரதான வீதியின் இருபக்கமும் மேற்படி பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் போன்ற உக்காத கழிவுகள் எமது சபை கழிவகற்றல் வாகனங்களில் தரம்பிரித்து சேகரிக்கப்பட்டன.
நாமும் இவ்வாறு கழிவுகளை தரம்பிரித்து சேகரிப்பதன் மூலம் சூழலை மாசுபடுத்தும் கழிவுகளை சூழலுக்கு மாசினை ஏற்படுத்தாத வகையில் மீள்சுழற்சிக்கு உள்ளாக்க முடியும்.
எனவே நாமும் சூழலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் உக்காத கழிவுகளை முறையான விதத்தில் சேகரித்து தூய்மையான சுற்றுப்புற சூழலை உருவாக்கி எமது எதிர்கால சந்ததிக்கு முன்னோடியாக திகழ்வோம்.



உள்ளூராட்சிமன்றங்களுக்கான செயற்றிறன் மதிப்பீடு 05.09.2023 எமது சபை பிரதான அலுவலகத்தில் நடைபெற்றது.
குறித்த மதிப்பீட்டில் சபையின் ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டது.




தேசிய வாசிப்புமாத போட்டிகளின் வரிசையில் 03.09.2023 அன்று எமது சபையின் கீழ் இயங்கும் கூமாங்குளம் பொதுநூலகத்தில் கூமாங்குளம் பெண்கள் கிராம அபிவிருத்திச்சங்கத்தின் அனுசரணையில் எமது சபையால் பாடசாலை மாணவர்களுக்கான “ஓவியப்போட்டி”நடாத்தப்பட்டது.
இப்போட்டியில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.



