எமது அலுவலகத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றங்களின் மாகாணமட்ட செயலாற்றுகை மதிப்பீடு PERFECT 2.0 27.10.2023 அன்று நடைபெற்றது.
இஅதன்போது எமது சபையின் ஆவணங்கள் மதிப்பீட்டுக்குழுவினால் பரிசீலிக்கப்பட்டன.
எமது அலுவலகத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றங்களின் மாகாணமட்ட செயலாற்றுகை மதிப்பீடு PERFECT 2.0 27.10.2023 அன்று நடைபெற்றது.
இஅதன்போது எமது சபையின் ஆவணங்கள் மதிப்பீட்டுக்குழுவினால் பரிசீலிக்கப்பட்டன.
2023 ஆம் ஆண்டுக்கான நவராத்திரி விழாவின் இறுதி நாளான விஜயதசமி பூஜை நிகழ்வுகள் 23.10.2023 அன்று எமது சபையின் பிரதான அலுவலகத்தில் நடைபெற்றது.
இப்பூஜையில் எமது சபையின் செயலாளர் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
கௌரவமான மற்றும் ஆக்கத்திறனை ஊக்குவிக்கும் வேலைவாய்ப்பினையும் எல்லோரையும் உள்ளடக்கிய நிலைபேறான பொருளாதார வளர்ச்சியினையும் முன்னிறுத்துதல் எனும் அபிவிருத்தி இலக்கிற்கமைய எமது சபையினால் தேசிய வாசிப்புமாதத்தினை முன்னிட்டு மாணவர்களின் கைவண்ணத்தில் உருவாக்கம் பெற்ற அவர்களின் ஆக்கத்திறனை வெளிப்படுத்தும் வகையிலான அழகிய ஆக்கங்கள் மற்றும் எமது அறிவிற்கு ஆதாரமான புத்தகங்கள் ஆகியன கண்காட்சிக்காக வைக்கப்படன.
இக்கண்காட்சி 18.10.2023 மற்றும் 19.10.2023 ஆகிய இருதினங்களும் எமது சபையின் கூமாங்குளம் பொதுநூலகத்தில் நடைபெற்றது.
கண்காட்சியினை ஏராளமான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.