மெச்சுரை கௌரவம் வழங்கல்-(11.09.2024)

இன்றையதினம்(11.09.2024) நூலகங்களுக்கு புதிதாக அங்கத்தவர்களை இணைப்பதற்காக வழங்கப்பட்ட அடைவுமட்டத்தை அடைந்த நூலகங்களுக்கு அமைச்சின் செயலாளர் அவர்களால் மெச்சுரை(Commendation)வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வானது வ/உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் மதியம் 1.00 மணியளவில் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வானது வ/உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் மதியம் 1.00 மணியளவில் நடைபெற்றது.

இந்த மெச்சுரை கௌரவத்தினை எமது சபையின்கீழ் இயங்கும் கூமாங்குளம் பொதுநூலகம் மற்றும் ஓமந்தை பொதுநூலகம் ஆகியன பெற்றுக்கொண்டதற்கமைவாக உத்தியோகத்தர்களை சிறப்புற வழிநடத்திய எமது சபை செயலாளர் மற்றும் சிறந்த அடைவினை எட்டிய உத்தியோகத்தர்கள் மேற்படி மெச்சுரை கௌரவத்தினை பெற்றுக்கொண்டனர்.

மேற்படி உத்தியோகத்தர்களுக்கு எமது சபைசார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கௌள்வதோடு இந்நிகழ்வில் மெச்சுரை கௌரவத்தினை பெற்றுக்கொண்ட நூலகங்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அத்துடன் சிறப்பான ஆலோசனைகள் மூலம் எம்மை வழிநடத்திச்செல்லும் எமது அமைச்சின் செயலாளர்,உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஆகியோருக்கு நாம் இந்நேரத்தில் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர்,உள்ளூராட்சி ஆணையாளர்,உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிகழ்வின் பதிவுகள்…..

பங்கேற்புடனான கிராமிய மதிப்பீடு-(10.09.2024)

இன்றையதினம்(10.09.2024) UNDP இன் நிதியுதவியில் OFFER CYLON நிறுவனத்தின் ஏற்பாட்டில் பங்கேற்புடனான கிராமிய மதிப்பீடு(PRA) பொன்னாவரசங்குளம் பொதுநோக்குமண்டபத்தில் காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இப்பிரதேசம் தொடர்பான விளக்கம்,பிரதேச வரைபடம்,மக்களின் வருமானம் மற்றும் பொதுமக்களின் பிரச்சனைகள்,தேவைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

இதன்போது பொதுமக்களால் பல்வேறுபட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதனடிப்படையில் தற்போது அவசர தேவையாக இனங்காணப்பட்ட போதைப்பொருளுக்கு அடிமையாகிக்கொண்டிருக்கும் இளம்சமூதாயத்தின் நலன்கருதி பொழுதுபோக்கினை மேம்படுத்தும் நோக்கில் அறிவொளி சனசமூக நிலையத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் பெற்றுத்தரும்படி மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு நிதி ஒதுக்கீடு செய்து மேற்படி கோரிக்கையை நிறைவேற்றுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த கிராமிய மதிப்பீட்டில் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இந்நிகழ்வின் பதிவுகள்…..

இலவச மருத்துவப்பரிசோதனை-(04.09.2024)

எமது சபையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கான இலவச மருத்துவப்பரிசோதனையொன்று கடந்த 04.09.2024 காலை 9.00 மணியளவில் எமது சபையின் சபாமண்டபத்தில் நடைபெற்றது.

மேற்படி மருத்துவப்பரியோதனையை எமது சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இலவசமாக நடாத்திய பொதுச்சுகாதார பணிமனைக்கு எமது சபை சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

மருத்துவ பரிசோதனையின் போதான பதிவுகள்…..