எலிக்காய்ச்சல் தடுப்புமருந்து வழங்கல்-(17.12.2024)

அண்மைநாட்களில் அதிகளவில் பரவிவரும் எலிக்காய்ச்சல் நோய்க்கான விழிப்புணர்வு செயலமர்வும் தடுப்புமருந்து வழங்கலும் எமது சபையில் கடந்த 17.12.2024 அன்றையதினம் பிற்பகல் 1.00 மணியவில் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு செயலமர்வினை வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி அவர்கள் நடாத்தி வைத்ததுடன் பொதுசுகாதார பரிசோதகரும் இணைந்திருந்தார்.
அத்துடன் இந்த விழிப்புணர்வு செயலமர்வில் எமது சபை ஊழியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றதோடு தடுப்புமருந்தினையும் பெற்றுக்கொண்டனர்.
இச்செயலமர்வின் பதிவுகள்

கிரகப்பிரவேசம்-புதுக்குளம் ஆயுள்வேத மருந்தகம்-(13.12.2024)

எமது சபைக்கு புதிதாக அமைக்கப்பட்ட புதுக்குளம் ஆயுள்வேத மருந்தக கட்டடத்துக்கான சம்பிராதயபூர்வமான கிரகப்பிரவேசம் கடந்த 13.12.2024 அன்றையதினம் காலை 10.30 மணிக்கு வெகுசிறப்பாக நடைபெற்றது.
இக்கட்டடமானது LDSP செயற்றிட்டத்தின் கீழ் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின் பதிவுகள்

தேசிய வாசிப்புமாத பரிசளிப்பு விழா-2024-(07.12.2024)

எமது சபையின் 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய வாசிப்புமாத பரிசளிப்பு விழா கடந்த 07.12.2024 அன்றையதினம் நெளுக்குளம் சண் மண்டபத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இப்பரிசளிப்பு விழாவில் எமது சபையின் நூலகங்களால் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் சிறந்த வாசகர்கள் மற்றும் உள்ளுர் எழுத்தாளர் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.

BEST ANNUAL REPORTS & ACCOUNTS AWARDS CEREMONY -2024 (02.12.2024)

எமது சபையானது 2023ஆம் ஆண்டுக்கான கணக்கறிக்கையிடல் சான்றிதழ்மட்ட தரக்கணிப்பு பெற்றமைக்கான (CERTIFICATE OF COMPLIANCE) சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
02.12.2024 அன்றையதினம் கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகாரத்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்விலேயே எமது சபைக்கு இச்சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.