இலவச மருத்துவ நடமாடும் சேவை-(24.01.2025)

எமது சபை மற்றும் நெளுக்குளம் ஶ்ரீ முருகன் ஆலய பரிபாலன சபையினரின் அனுசரணையில் 24.01.2025 அன்றையதினம் வவுனியா ஓய்வூதியர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் நெளுக்குளம் ஶ்ரீ முருகன் ஆலய அன்னதான மண்டபத்தில் இலவச மருத்துவ நடமாடும் சேவையொன்று நடாத்தப்பட்டது.
இந்நடமாடும் சேவையில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

2025 ஆம் வருடத்தில் கடமைகளை ஆரம்பித்தல்-(01.01.2025)

எமது சபையின் 2025 ஆம் ஆண்டுக்கான கடமைகள் 01.01.2025 காலை 8.30 மணியளவில் சபை செயலாளர் அவர்களினால் தேசியக்கொடியேற்றலுடன் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து சத்தியப்பிரமாணம்/உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.அடுத்து செயலாளர் அவர்கள் தனது வாழ்த்துசெய்தியை பகிர்ந்ததோடு ஊழியர்களுக்கு2025 ஆம் வருடத்திற்கான வேலைநடைமுறைகள் தொடர்பான கலந்துரையாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தரின் பங்களிப்பில் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து காலை 10.00 மணியளவில் எமது உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அவர்கள் தனது ஆசிச்செய்தியுடன் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அரசநடைமுறைகள் தொடர்பில் பல ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக ஆய்வு உத்தியோகத்தர்கள் மற்றும் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் பங்குகொண்டிருந்தனர்.