தாகசாந்தி நிகழ்வு-(27.03.2025)

மன்னாரிலிருந்து கல்வாரி புனித தலத்திற்கு மன்னார் பிரதான வீதி ஊடாக தலயாத்திரை மேற்கொண்ட யாத்திரிகளுக்கு (27.03.2025) அன்றையதினம் அவர்களின் தாகத்தினை தீர்க்கும் நோக்கில் பம்பைமடுவில் எமது சபையால் தாகசாந்தி நிலையம் அமைக்கப்பட்டு யாத்திரிகளுக்கு குளிர்பானங்கள் மற்றும் பழவகைகள் வழங்கிவைக்கப்பட்டது.

இலவச ஆயுர்வேத மருத்துவ நடமாடும் சேவை-(19.03.2025)

எமது சபையால் இன்றையதினம்(19.03.2025) ஓயார்சின்னக்குளம் பொதுநோக்குமண்டபத்தில்  இலவச ஆயுர்வேத மருத்துவ நடமாடும் சேவையொன்று நடாத்தப்பட்டது.

இந்த ஆயுர்வேத நடமாடும் சேவையில் அதிகளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

சிவப்பை சுட்டும் நாள்(RED DAY)-(14.03.2025)

எமது சபையின் ஆளுகையின் கீழுள்ள ஓமந்தை முன்பள்ளியில்(14.03.2025) அன்றையதினம் சிவப்பை சுட்டும் நாள்(RED DAY) வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் முன்பள்ளி சிறார்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் பதிவுகள்