வருடா வருடம் செப்ரம்பர் மாதம் 16 ஆம் திகதி உலகெங்கும் கொண்டாடப்படும் தூய்மைப்படுத்தல் தினத்தினை முன்னிட்டு எமது சபையினால் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் போன்ற உக்காத கழிவுகளை சேகரித்து சுற்றாடலை தூய்மையாக்கும் சிரமதானப்பணியானது 21.09.2023 அன்று ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.
இந்த தூய்மையாக்கும்பணியில் எமது சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள்இமத்திய சுற்றாடல் அதிகார சபை உத்தியோகத்தர்கள்இ வவுனியா பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் கலைவாணி சனசமூக நிலையத்தினர் கைகோர்த்திருந்தனர்.
இவர்கள் இந்த தூய்மையாக்கல் பணிக்கு வழங்கிய பூரண ஒத்துழைப்பிற்கு சபை சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்
அந்த வகையில் இன்றைய தினம் தாண்டிக்குளம் சந்தி தொடக்கம் ஓமந்தை பொலிஸ்நிலையம் வரையுள்ள யு9 பிரதான வீதியின் இருபக்கமும் மேற்படி பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் போன்ற உக்காத கழிவுகள் எமது சபை கழிவகற்றல் வாகனங்களில் தரம்பிரித்து சேகரிக்கப்பட்டன.
நாமும் இவ்வாறு கழிவுகளை தரம்பிரித்து சேகரிப்பதன் மூலம் சூழலை மாசுபடுத்தும் கழிவுகளை சூழலுக்கு மாசினை ஏற்படுத்தாத வகையில் மீள்சுழற்சிக்கு உள்ளாக்க முடியும்.
எனவே நாமும் சூழலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் உக்காத கழிவுகளை முறையான விதத்தில் சேகரித்து தூய்மையான சுற்றுப்புற சூழலை உருவாக்கி எமது எதிர்கால சந்ததிக்கு முன்னோடியாக திகழ்வோம்.