மயானங்களும் பிண எரிப்பகங்களும்

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையைப் பொறுத்த வரையில்  ஒவ்வொரு இனத்தவருக்கும் தனியான மயானங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  ஒவ்வொரு மயானமும் இடுகாடுகள், சுடுகாடுகள் பற்றிய கட்டளைச் சட்டத்தின் கீழ் வர்தத் மானியில் வெளியிடப்பட்டதுடன்  மயானங்கள், பிண எரிப்பகங்கள் பற்றிய துணை விதிகள் அங்கீகரிக்கப்பட்டும் உள்ளது. 

 

மேலும்  குறைந்தளவான மயானத்திற்கு மட்டுமே சுற்று மதில் அமைக்கப்பட்டுள்ளது. ஏனைய  மயானங்களுக்கு வேலி அமைக்கப்பட்டுள்ளது.  ஒவn; வாரு மயானத்தினதும் காணி உறுதி மற்றும் நில வரைபடங்கள் பேணப்படுகின்றது. அத்துடன்  நல்லடக்கத்திற்கு இடங்களை ஒதுக்கிக்கொடுக்கும் பணிகள்,  ஒவn; வாரு மயானத்திலும் நல்லடக்கம் செய்யப்படும் பூதவுடல்கள் பற்றிய பதிவேடு தனித்தனியே பேணல், மயானத்தைப் பராமரிக்கும் பணிக்கு சமூகத்தின் பங்களிப்பை பெற்றல் போன்ற நடவடிக்கைகளை மரண சங்கத்தின் மூலம் சபை நிர்வகிக்கின்றது. அத்துடன் மயானப் பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் நிர்வகித்தல் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படுகின்றது. மயானம் தொடர்பில் உள்;ராட்சிக்கே உரித்தானதாக இருந்தும் பல மயானங்கள் கையளிக்கப்படாமல் உள்ளதால் அது தொடர்பில் கவனம் செலுத்த முடியாத நிலை தொடர்கின்றது. எமது நிர்வாகப் பிரதேசத்தில் 55ற்கு மேற்பட்ட மயானங்கள் காணப்படுகின்றன.  

 

மயானப் பாதுகாப்பு சபை என்பது கிராம மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு தன்மை நிலவாததால் அது செயலற்றதாக காணப்படுகின்றது. மயான பாதுகாப்பு சபையின் திறனற்ற செயற்பாடு காரணமாக மயானங்களின் அபிவிருத்திக்கு வருடாவருடம் செலவு செய்ய வேண்டியுள்ளதோடு அது சிறந்த செயற்பாடாக வியாபித்துக் கொள்ள முடிவதில்லை. மயான பராமரிப்புக்கு என குறிப்பிடத்தக்க நிதி மட்டுமே கிடைக்கத்தக்கதாக இருந்த போதும் பராமரிப்பு தன்மை சீரற்ற நிலை காணப்படுவதால் அதன் பயன்களை பெறமுடியவில்லை. 

 

மயானத்தில் மேற்கொள்ளும் கல்லறை அமைப்பு வேலைகள் முன் அனுமதி பெற்று 

மேற்கொள்ளப்படுவதில்லை தொடர்பில் கிராம அபிவிருத்திச் சங்கங்களுக்கும் சனசமூக நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன. கல்லறை அமைப்பு வேலைகள் ஏகோபித்த செயற்பாடாக அமைக்கப்படின் எதிர்காலத்தில் மயான இடநெருக்கடி ஏறப் டுவது தவிர்க்கமுடியாதொன்றாகும்.  

கல்லறைகள் அமைப்பதன் ஊடாக எதிர்காலத்தில் மயான இடநெருக்கடிகள் ஏற்படும் என்பதால் கல்லறைகள் அமைக்க அனுமதி வழங்கப்படுவதில்லை. இதற்கு பதிலாக சுற்றுமதிலின் ஒரு பகுதி நிர்மாணித்து அதில் அவரவர் ஞாபகார்த்த சின்னங்கள் பொறிக்க அனுமதிக்கப்படுகின்றது.