நோய்தடுப்பு சேவை
வவுனியா தெற்கு பிரதேச சபையின் சபையானது நுளம்புகள் பரவுவதைத் தடுப்பதற்கும், தனியார் மற்றும் பொது இடஙக் ளில் நுளம்புகள் பரவுவதற்குள்ள வாய்ப்புகள் பற்றி அடிக்கடி பரிசீலனை செய்வதற்கும், நுளம்புகள் பரவுவதைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் பற்றி மக்களை அறிவுறுத்தி வந்துள்ளது. மேலும் நுளம்புகள் பரவுவதைத் தடுப்பதற்கான கிருமிநாசினிகளை தெளிப்பது , சிறந்த சுகாதாரப்பழக்கவழக்கங்கள் பற்றி மக்களுக்கு அறிவுறுத்தி இருத்தல் என்பன உள்;ராட்சி வாரத்தின் மூலம் விசேடமாக செய்து வருகின்றது.
மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக நாளாந்தம் அகற்ற வேண்டிய குப்பையின் அளவும் அதிகரித்து காணப்பட்டதுடன் மலசல கூட கழிவகற்றுவதும் அதிகரித்து காணப்பட்டது. எனினும் பிரதேச சபையின் சபை வாகனப் பற்றாக்குறை, ஆளணிப்பற்றாக்குறை மத்தியில் கழிவகற்றல் நடவடிக்கை சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. குப்பைகளை ஏற்றியதால் பல வாகனங்கள் உடைந்தும், பழுதடையும் நிலையும் ஏற்பட்டது.