குடிநீர் சேவை
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையானது தனது எல்லைக்குள் எல்லப்பர்மருதங்குளம், நெளுக்குளம்,ஓமந்தை ஆகிய இடங்களில் Filter மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் தேவை ஒன்றின் போது தற்காலிக முறையிலும் நீரினை வழங்கி வருகின்றது. இச்சேவைகள் யாவும் பொது இடங்களில் மேற்கொள்ளப்படுகின்றது.
மிகவும் வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்களுக்கும் இலவச குடிநீர் வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்பட்டது குறிப்பாக மதினாநகர், காத்தான்கோட்டம், தோணிக்கல், சாம்பல்தோட்டம் , நெளுக்குளம் மயான ஒழுங்கை, தாஸ்கோட்டம், எல்லப்பர்மருதங்குளம் ஆகிய இடங்களுக்கு நீர் தாங்கிகள் வைக்கப்பட்டு இலவச குடி நீர் வழங்கப்படுகின்றது. அத்துடன் கட்டணங்களை அறவிட்டும் உழவு இயந்திர தண்ணீர் தாங்கி, தற்காலிக பிளாஸ்டிக் தண்ணீர் தாங்கிகள் மூலம் நீர் விநியோகிக்கப்பட்டது.