புத்தக கண்காட்சி-ஓமந்தை பொதுநுாலகம்-(21.10.2024)

தேசிய வாசிப்புமாதத்தினை முன்னிட்டு எமது நூலகத்தினால் 21.10.2024 அன்றையதினம் ஓமந்தை மத்தியகல்லூரியில் புத்தகக்கண்காட்சியும் இலவச அங்கத்தவர் அட்டை விநியோகமும் நடைபெற்றது.
இந்த புத்தகக்கண்காட்சியை ஏராளமான மாணவர்கள் பார்வையிட்டனர்.
இக்கண்காட்சியின் பதிவுகள்

கதை சொல்லும் நேரம்-(16.10.2024)

கடந்த 16.10.2024 அன்று தேசிய வாசிப்புமாதத்தினை முன்னிட்டு எமது நூலகத்தில் சிறார்களுக்கு கதை சொல்லும் நேரம் போட்டி நடாத்தப்பட்டது.

இப்போட்டியில் சிறார்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.

இப்போட்டியின் போதான பதிவுகள்

புத்தகக்கண்காட்சி-கூமாங்குளம் பொதுநுாலகம்-(15.10.2024)

இன்றைய தினம்(15.10.2024) எமது நுாலகத்தில் புத்தகக்கண்காட்சியும் Microbit உபகரண அறிமுக நிகழ்வும் வெகுசிறப்பாக நடைபெற்றது.

இப்புத்தக கண்காட்சியினை ஏராளமான பாடசாலை மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

இந்நிகழ்வின் பதிவுகள்….

டெங்கு ஒழிப்பு நடவடிக்கை-(12.10.2024)

எமது சபையால் 12.10.2024 அன்றையதினம் மகாறம்பைக்குளம் பகுதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் எமக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கிய பொதுசுகாதார பரிசோதகர் அவர்களுக்கு எமது சபைசார்பான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் போது…..

நவராத்திரி பூஜை-ஓமந்தை பொதுநுாலகம்-(11.10.2024)

இன்றையதினம்(11.10.2024) எமது நூலகத்தில் நவராத்திரி பூஜை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.

இந்த நவராத்திரி பூஜையில் முன்பள்ளி மாணவர்கள்,பெற்றோர்கள் எமது சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வின் பதிவுகள்…

நவராத்திரி பூஜை-கூமாங்குளம் பொதுநுாலகம்-(10.10.2024)

இன்றையதினம்(10.10.2024) எமது நூலகத்தில் நவராத்திரி பூஜை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.

இந்த நவராத்திரி பூஜையில் முன்பள்ளி மாணவர்கள்,பெற்றோர்கள் எமது சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வின் பதிவுகள்…

 

வறிய மாணவர்களுக்கான, குடும்பங்களுக்கான, பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உதவி வழங்கல்-(10.10.2024)

இன்றையதினம் (10.10.2024) எமது சபைக்குட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட வறிய மாணவர்களுக்கான,குடும்பங்களுக்கான மற்றும் பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு எமது சபை பிரதான அலுவலகத்தில் சபை செயலாளர் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது தெரிவுசெய்யப்பட்ட வறிய மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வின் பதிவுகள்…..

நவராத்திரி விழா-பிரதான அலுவலகம்-(09.10.2024)

எமது சபையில் நேற்றையதினம்(09.10.2024) நவராத்திரிபூஜைகொண்டாடப்பட்டது.இந்நிகழ்வில் எமது சபை உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் பதிவுகள்….

தேசிய வாசிப்புமாத போட்டிகள்-ஓமந்தை பொதுநுாலகம்-(05.10.2024)

2024 ஆம் ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாத போட்டிகள் எமது நுாலகத்தினால் இன்றையதினம் (05.10.2024) ஓமந்தை மத்தியகல்லூரியில் நடாத்தப்பட்டது.

அந்தவகையில் வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட முன்பள்ளிகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கே இப்போட்டிகள் நடாத்தப்பட்டன.

இப்போட்டிகளில் நுாற்றுக்கணக்கான மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் பதிவுகள்……

தேசிய வாசிப்புமாத போட்டிகள்-கூமாங்குளம் பொதுநுாலகம்-(05.10.2024)

2024 ஆம் ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாத போட்டிகள் எமது நுாலகத்தினால் இன்றையதினம் (05.10.2024) நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தில் நடாத்தப்பட்டது.

அந்தவகையில் வவுனியா தெற்குவலயத்திற்குட்பட்ட முன்பள்ளிகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கே இப்போட்டிகள் நடாத்தப்பட்டன.

இப்போட்டிகளில் நுாற்றுக்கணக்கான மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் பதிவுகள்….