சிறுவர்தின நிகழ்வு-(01.10.2024)

எமது சபையின் கீழ் இயங்கும் ஓமந்தை பொதுநுாலகத்தில் 01.10.2024 அன்றையதினம் சிறுவர்தினம் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் எமது சபைசெயலாளர்,உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள்,பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் பதிவுகள்…..

மெச்சுரை கௌரவம் வழங்கல்-(11.09.2024)

இன்றையதினம்(11.09.2024) நூலகங்களுக்கு புதிதாக அங்கத்தவர்களை இணைப்பதற்காக வழங்கப்பட்ட அடைவுமட்டத்தை அடைந்த நூலகங்களுக்கு அமைச்சின் செயலாளர் அவர்களால் மெச்சுரை(Commendation)வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வானது வ/உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் மதியம் 1.00 மணியளவில் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வானது வ/உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் மதியம் 1.00 மணியளவில் நடைபெற்றது.

இந்த மெச்சுரை கௌரவத்தினை எமது சபையின்கீழ் இயங்கும் கூமாங்குளம் பொதுநூலகம் மற்றும் ஓமந்தை பொதுநூலகம் ஆகியன பெற்றுக்கொண்டதற்கமைவாக உத்தியோகத்தர்களை சிறப்புற வழிநடத்திய எமது சபை செயலாளர் மற்றும் சிறந்த அடைவினை எட்டிய உத்தியோகத்தர்கள் மேற்படி மெச்சுரை கௌரவத்தினை பெற்றுக்கொண்டனர்.

மேற்படி உத்தியோகத்தர்களுக்கு எமது சபைசார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கௌள்வதோடு இந்நிகழ்வில் மெச்சுரை கௌரவத்தினை பெற்றுக்கொண்ட நூலகங்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அத்துடன் சிறப்பான ஆலோசனைகள் மூலம் எம்மை வழிநடத்திச்செல்லும் எமது அமைச்சின் செயலாளர்,உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஆகியோருக்கு நாம் இந்நேரத்தில் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர்,உள்ளூராட்சி ஆணையாளர்,உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிகழ்வின் பதிவுகள்…..

பங்கேற்புடனான கிராமிய மதிப்பீடு-(10.09.2024)

இன்றையதினம்(10.09.2024) UNDP இன் நிதியுதவியில் OFFER CYLON நிறுவனத்தின் ஏற்பாட்டில் பங்கேற்புடனான கிராமிய மதிப்பீடு(PRA) பொன்னாவரசங்குளம் பொதுநோக்குமண்டபத்தில் காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இப்பிரதேசம் தொடர்பான விளக்கம்,பிரதேச வரைபடம்,மக்களின் வருமானம் மற்றும் பொதுமக்களின் பிரச்சனைகள்,தேவைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

இதன்போது பொதுமக்களால் பல்வேறுபட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதனடிப்படையில் தற்போது அவசர தேவையாக இனங்காணப்பட்ட போதைப்பொருளுக்கு அடிமையாகிக்கொண்டிருக்கும் இளம்சமூதாயத்தின் நலன்கருதி பொழுதுபோக்கினை மேம்படுத்தும் நோக்கில் அறிவொளி சனசமூக நிலையத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் பெற்றுத்தரும்படி மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு நிதி ஒதுக்கீடு செய்து மேற்படி கோரிக்கையை நிறைவேற்றுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த கிராமிய மதிப்பீட்டில் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இந்நிகழ்வின் பதிவுகள்…..

இலவச மருத்துவப்பரிசோதனை-(04.09.2024)

எமது சபையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கான இலவச மருத்துவப்பரிசோதனையொன்று கடந்த 04.09.2024 காலை 9.00 மணியளவில் எமது சபையின் சபாமண்டபத்தில் நடைபெற்றது.

மேற்படி மருத்துவப்பரியோதனையை எமது சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இலவசமாக நடாத்திய பொதுச்சுகாதார பணிமனைக்கு எமது சபை சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

மருத்துவ பரிசோதனையின் போதான பதிவுகள்…..

மாதிரி திண்மக்கழிவு சேகரிப்பு செயற்பாடு-(22.08.2024)

எமது சபையின் பங்களிப்புடன் SEED நிறுவனத்தின் ஏற்பாட்டில் பொதுமக்களின் பங்குபற்றுதலுடன் கடந்த 22.08.2024 அன்றையதினம் மாதிரி திண்மக்கழிவு சேகரிப்பு செயற்பாடு சிதம்பரநகர் கிராமத்தில் நடைபெற்றது.

இதன்போது பொதுமக்களுக்கு திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு வழங்கப்பட்டதுடன் எவ்வாறு திண்மக்கழிவுகளை தரம்பிரித்து அகற்றுவது தொடர்பாகவும் பூரண விளக்கங்கள் வழங்கப்பட்டது.

இச்செயற்பாட்டின் பதிவுகள்

 

ஸ்வர்ணபுரவர தேசிய விருது-(25.07.2024)

எமது சபைக்கு 25.07.2024 அன்றையதினம் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்(BMICH) நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சிமன்றங்களின் செயற்றிறனை மதிப்பிடுவதற்கான ஸ்வர்ணபுரவர தேசியவிருது வழங்கும் விழாவில் கௌரவ பிரதமர் தினேஸ் குணவர்த்தன அவர்களால் ஸ்வர்ணபுரவர தேசியவிருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
நாடுமுழுவதுமுள்ள 276 பிரதேசசபைகளுக்குள் கட்டம் கட்டமாக நடாத்தப்பட்ட சபைகளின் செயற்றிறன் மதிப்பீட்டின் அடிப்படையில் எமது சபையானது தேசிய ரீதியிலான மதிப்பாய்வுக்கு தெரிவுசெய்யப்பட்டது.அதனடிப்படையில்
1. செயற்றிறன்
2. இணக்கப்பாடு
3. வினைத்திறன்
4. புத்தாக்கம்
5. நல்லாட்சி
ஆகியபிரிவுகளின்கீழ் நடாத்தப்பட்ட தேசிய ரீதியிலான மதிப்பீட்டின் முடிவுகளின்படி எமது சபையானது வினைத்திறன் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டில் அதிகூடிய புள்ளிகளைப்பெற்று முதலிடத்தை பெற்றுக்கொண்டதுடன் இதற்கான சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அத்துடன் மேற்கூறப்பட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின் மொத்தபுள்ளிகளின் அடிப்படையில் எமது சபை மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டது. அதனடிப்படையில் எமது சபைக்கு வெண்கல ஸ்வர்ணபுரவர தேசியவிருது மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
எமது சபை இந்த கௌரவத்தை பெறுவதற்கு பல்வேறுதரப்பினர் தமது ஒத்துழைப்பினை எமக்கு வழங்கியிருந்தார்கள்.அவர்களை நாம் இந்நேரத்தில் நன்றியுடன் நினைவுகூர கடமைப்பட்டுள்ளோம்.
அந்தவகையில் முதலாவதாக எமது சபையின் சகல உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் எமது உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.நாம் இக்கௌரவத்தை பெற இவர்களின் அர்ப்பணிப்பும் ஒத்துழைப்பும் அளப்பெரியது.
அடுத்து எமது உள்ளூராட்சி ஆணையாளராக இருந்து தற்சமயம் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக பதவியுயர்வு பெற்றிருக்கும் திரு.பிரணவநாதன் Sir அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
நாம் அடுத்து எமது உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அவர்களுக்கு எமது உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.இவரது ஆலோசனைகள் நாம் இக்கௌரவத்தை பெற பெரிதும் பங்களிப்பு செய்தது.
எமது உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக ஆய்வுஉத்தியோகத்தர் மற்றும் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இந்த செயற்றிறன் மதிப்பீட்டில் எமது சபைக்குட்பட்ட பகுதிகளில் தமது பொதுசுகாதார நடவடிக்கைகள் மூலம் அதிகளவான புள்ளிகளை ஈட்டித்தந்து தமது பூரண ஒத்துழைப்பினை எமக்கு வழங்கி உதவிய சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுசுகாதார பரிசோதகர்கள் ஆகியோருக்கு விசேடமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அடுத்ததாக எமது சபையின் கீழ் இயங்கும் அனைத்து சனசமூக நிலையங்களுக்கும் எமது உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.இவர்களும் எமக்கு பூரண ஒத்துழைப்பு நல்கியிருந்தார்கள்.
நாம் இந்த செயற்றிறன் மதிப்பீட்டில் அதிகளவான புள்ளிகளை பெறுவதற்கு CDLG PROJECT மற்றும் OFFER CYLON நிறுவனம் மூலம் நடாத்தப்பட்ட பயிற்சிநெறிகளும்,அவர்கள் எமக்கு வழங்கிய ஆலோசனைகளும்,வழிகாட்டுதலும் முக்கிய பங்காற்றின என்றால் அது மிகையாகாது.இவ்வாறு எமக்கு ஒத்துழைப்பு நல்கிய CDLG PROJECTக்கு பொறுப்பான உத்தியோகத்தர்களுக்கும் OFFER CYLON நிறுவனத்திற்கும் நாம் எமது விசேடமான நன்றிகளை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.
இறுதியாக சபையுடன் எப்போதும் பக்கபலமாக இருக்கும் எமது அன்பான பொதுமக்களுக்கும் எமது உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதில் பேருவகை அடைகின்றோம்.
அத்துடன் இவ்விருது வழங்கும் விழாவில் எம்முடன் விருதுபெற்ற அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
நன்றி
மக்கள் சேவை தொடரும்…
 
 

போதைப்பொருள் விழிப்புணர்வு வீதி நாடகம்-(24.07.2024)

இன்றையதினம்(24.07.2024) எமது சபையின் ஆளுகையின் கீழுள்ள பொன்னாவரசன்குளம் அறிவொளி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் அப்பகுதி பாடசாலை மாணவர்களால் “போதைப்பொருள் பழக்கத்திலிருந்து மீண்டு நற்பண்புடைய மனிதனாய் மாறுவோம்”எனும் தொனிப்பொருளில் போதைப்பொருள் எதிர்ப்பு தொடர்பான விழிப்புணர்வு வீதிநாடகம் அரங்கேற்றப்பட்டது.
இவ்வீதி நாடகத்தினை பொதுமக்கள் பலர் கண்டுகளித்தனர்.
போதைப்பொருள் பாவனை அதிகரித்து காணப்படும் தற்போதைய காலகட்டத்தில் பொதுமக்களுக்கு மிக மிக அவசியமான இந்த போதைப்பொருள் பாவனை எதிர்ப்பு தொடர்பான விழிப்புணர்வு வீதிநாடகத்தினை அரங்கேற்றிய மாணவர்களுக்கும் இதனை ஒழுங்குபடுத்திய பொன்னாவரசன்குளம் அறிவொளி சனசமூக நிலையத்தினருக்கும் எமது சபைசார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இவ்வீதி நாடகத்தின்போது….

📙 நூல்கள் தொடர்பான கருத்தறிதல் 🔖📗

எமது சபையின் ஆளுகையின் கீழுள்ள ஓமந்தை மற்றும் கூமாங்குளம் பொதுநூலகங்களுக்கு வருடா வருடம் சபையின் நிதியொதுக்கீட்டில் நூல்கொள்வனவு செய்யப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இவ்வருடம் நூல்கொள்வனவுக்கென ஒதுக்கப்பட்ட நிதுயொதுக்கீட்டில் வாசகர்களின் தேவையை பூர்த்திசெய்யும் நோக்கில் வாசகர்களிடமும் நூல்கள் பற்றி கருத்தறிந்து அவர்களின் தேவையின் அடிப்படையில் நூல்கள் கொள்வனவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
எனவே வாசகர்களாகிய நீங்கள் உங்களுக்கு எவ்வாறான நூல்கள் அவசியம் மற்றும் அந்த நூல்கள் பற்றிய விபரங்களை எமக்கு 19.07.2024 ஆம் திகதிக்கு முன்னதாக எமக்கு தெரிவிக்கும் பட்சத்தில் அவ்வகை நூல்களை நாம் கொள்வனவு செய்து உங்களது தேவையை இலகுவாக்கமுடியும் என்பதனை அன்புடன் அறியத்தருகின்றோம்.
எம்மை தொடர்பு கொள்ள
அலுவலக தொலைபேசி:-0242225737
கூமாங்குளம் பொதுநூலகம்:-0242051781
ஓமந்தை பொதுநூலகம்:-0242052731
அலுவலக மின்னஞ்சல்:-npvstps@yahoo.com
அல்லது எமது அலுவலகத்திற்கு நேரடியாகவும் வருகை தந்து தங்களது புத்தக கோரிக்கையை சமர்ப்பிக்கலாம்.
நன்றி
தகவல்
செயலாளர்
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை

நூலக நடமாடும் சேவை-(16.07.2024)

இன்றையதினம்(16.07.2024) எமது சபையின் ஆளுகையின் கீழுள்ள ஓமந்தை பொதுநூலகத்தினால் நொச்சிமோட்டை கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தில் நூலக நடமாடும் சேவை நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாணவர்களுக்கு இலவச நூலக அங்கத்துவ அட்டைகளும் வழங்கிவைக்கப்பட்டன.
நிகழ்வின் பதிவுகள்

கணக்காய்வு முகாமைத்துவக்குழு கூட்டம்-(12.07.2024)

எமது சபையில் 12.07.2024 அன்று காலை 10.00 மணியளவில் 2ஆம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவக்குழு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாகாண கணக்காய்வு உத்தியோகத்தர்கள் பிரந்திய உள்ளுராட்சி அலுவலக ஆய்வு உத்தியோகத்தர்கள் மற்றும் எமது சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

கணக்காய்வு முகாமைத்துவக்குழு கூட்ட பதிவுகள்…