எமது சபையில் அர்பணிப்பான சேவையாற்றி வேறு அலுவலகங்களுக்கு இடமாற்றம் பெற்றுச்சென்ற மற்றும் எமது சபையிலிருந்து விடைபெற்றுச்சென்ற உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு 28.06.2024 அன்றையதினம் பிற்பகல் 02.00 மணியளவில் எமது சபையின் ஊழியர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் சபையின் சபா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இப்பிரியாவிடை நிகழ்வில் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள்
திரு.எட்வேர்ட்-றொக்சன்
(அபிவிருத்தி உத்தியோகத்தர்)
திரு.சுப்பிரமணியம்-வரதகுமார்
(அபிவிருத்தி உத்தியோகத்தர்)
திருமதி.நாகேந்திரம்-பவித்திராயணி
(அபிவிருத்தி உத்தியோகத்தர்)
திருமதி.முகலாயன்-சங்கீதா
(அபிவிருத்தி உத்தியோகத்தர்)
திருமதி.லோகேஸ்வரன்-கோகிலவாணி
(முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்)
திருமதி.ஶ்ரீஸ்கந்தராஜா-றபேக்கா
(வருமானப்பரிசோதகர்)
திருமதி.பாத்திமா பஸ்னா றபிவுத்தீன்
(வருமானப்பரிசோதகர்)
திரு.கந்தசாமி-கிரிகரன்
(சுகாதாரத்தொளிலாளி)
இதுவரை காலமும் எமது சபையில் தமது அர்ப்பணிப்பான சேவையை வழங்கி வேறுஅலுவலகங்களுக்கு இடமாற்றலாகி சென்றிருக்கும் உத்தியோகத்தர்களின் பணி மென்மேலும் சிறக்கவும் சபையிலிருந்து விடைபெற்றுச்சென்ற உத்தியோகத்தர்களின் எதிர்காலம் சிறப்புடன் அமையவும் எமது சபை சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு இவர்கள் எமது சபையில் ஆற்றிய அர்ப்பணிப்பான சேவைக்கு எமது மனமாரந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பிரியாவிடை நிகழ்வின் பதிவுகள்.
இன்றையதினம் (26.06.2024) தோணிக்கல் கிராம அபிவிருத்திச்சங்க கட்டடத்தில் எம்மால் நடாத்தப்பட்ட இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் மற்றும் ஆதனவரி செலுத்துவதற்கான நடமாடும் சேவையின் போதான பதிவுகள்




தற்சமயம் எமது நடமாடும் சேவை மற்றும் இலவச மருத்துவமுகாம் தோணிக்கல் கிராம அபிவிருத்திச்சங்க கட்டடத்தில் நடைபெற்று வருகின்றது.
இன்று பிற்பகல் 03.30 மணிவரை இந்நடமாடும் சேவை நடைபெறும்.

எமது சபையால் LDSP செயற்றிட்டத்தின் நிதியுதவியின் கீழ் பம்பைமடுவில் நிர்மாணிக்கப்படவுள்ள கடைத்தொகுதிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 15.05.2024 (நேற்றைய தினம்) காலை 8.30 மணியளவில் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் எமது சபை செயலாளர்,தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.






எமது சபையால் LDSP செயற்றிட்டத்தின் நிதியுதவியின் கீழ் ஓமந்தை வன்னி அறுசுவையகத்தின் எல்லைப்பரப்பில் புதிதாக அமைக்கப்படவுள்ள கடைத்தொகுதிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றையதினம்(03.05.2024) காலை 10.00 மணியளவில் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது உள்ளூராட்சி உதவி ஆணையாளர்,எமது சபை செயலாளர் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஆகியோர் புதிய கடைத்தொகுதிகளுக்கான அடிக்கல்லினை நாட்டிவைத்தனர்.







இன்றையதினம்(21.03.2024) PERFECT 2+ COMPETITION க்கான தேசிய ரீதியிலான மதிப்பாய்வு எமது சபையில் நடைபெற்றது.உள்ளுராட்சி அமைச்சிலிருந்து வருகை தந்திருந்த ஆறு(06) பேர் கொண்ட தேசியரீதியிலான குழுவினர் இந்த மதிப்பாய்வினை மேற்கொண்டிருந்தனர்.
ஏற்கனவே மாகாண ரீதியில் பிரதேச சபைகளிடையே மேற்கொள்ளப்பட்ட மதிப்பாய்வில் வடமாகாணத்தில் இருந்து தேசியரீதியிலான மதிப்பாய்வுக்கு தெரிவுசெய்யப்பட்ட மூன்று பிரதேசசபைகளுள் எமது சபையும் தெரிவுசெய்யப்பட்டமைக்கமைவாக இன்றையதினம் இவ்மதிப்பாய்வு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இந்த மதிப்பாய்வுக்கு முழுஈடுபாட்டுடன் தமது பூரண ஒத்துழைப்பினை வழங்கிய எமது சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள்இசுகாதார வைத்திய அதிகாரிஇபொதுசுகாதார பரிசோதகர்கள் மற்றும் சனசமூக நிலையத்தினர் ஆகியோருக்கு எமது சபை சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.














வடமாகாணத்தின் 34 உள்ளுராட்சி மன்றங்களால் உருவாக்கப்பட்ட இணையத்தளங்களுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு 01.03.2024 அன்றையதினம் காலை 10மணியளவில் பிரதம செயலாளர் அலுவலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பிரணவநாதன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது 34 உள்ளுராட்சிமன்றங்களுக்குமான இணையத்தளங்கள் வடக்குமாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களினால் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வடமாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்கள் கருத்துத்தெரிவிக்கையில் நேரவிரயமில்லாமல் தமது தேவையினை நிறைவேற்ற எண்ணும் இன்றைய கால நவீன சமூகத்திற்கு இணையத்தளம் சிறந்த வரப்பிரசாதமாக இருக்கும் என தெரிவித்தார்.
அத்துடன் உள்ளுராட்சி நிறுவனங்கள் ஆளுகின்ற அமைப்பாக காணப்படுகின்றது எனவும் வரிசேகரிப்பு,சட்டஉருவாக்கம்,சேகரித்த பணத்தினை திட்டமிட்டு செலவழித்தல் மற்றும் திட்டமொன்றை உருவாக்கி அதனை நிறைவேற்றி முடித்தல் போன்றனவற்றிற்கு அதிகாரத்தினை கொண்டு காணப்படுவதனால் ஏனைய அரச நிறுவனங்களிலிருந்து உள்ளுராட்சி நிறுவனங்கள் தனித்துவம் மிகுந்தவை எனவும் வடமாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்கள் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து இந்த இணையத்தள உருவாக்கத்தில் முழு ஈடுபாட்டுடன் செயற்பட்ட உள்ளுராட்சி சபை உத்தியோகத்தர்களுக்கும் இவ் இணையத்தள உருவாக்கம் தொடர்பான பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் உத்தியோகத்தர்களுக்கு வழங்கி இவ் இணையத்தள உருவாக்கத்தில் உறுதுணையாக இருந்த வளவாளர் குழாத்தினருக்கும் மெச்சுரைகள் வழங்கி கௌரவிக்கப்பட்து.
எமது சபைக்கான இணையத்தளத்தினை (www.vavuniyastamil.ps.gov.lk) எமது சபை உத்தியோகத்தர்களான திருமதி.றம்மியா டினோட் றொசாந்,திரு.வாமதேவா துவாரகன் மற்றும் திருமதி.வினிற்றன் மிலோஜா ஆகியோர் வடிவமைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ் அங்குரார்ப்பண நிகழ்வில் வடக்குமாகாண பிரதமசெயலாளர்,உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர்,வடமாகாண உள்ளுராட்சி உதவி ஆணையாளர்கள்,சபை செயலாளர்கள்,UNDP அமைப்பின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

2024 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு எமது சபை அலுவலகத்தில் 01.01.2024 சபை செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது செயலாளர் அவர்களால் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டு 2024 ஆண்டுக்கான சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளப்பட்டது.
அதனை தொடர்ந்து உத்தியோகத்தர்கள் ஊழியர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் செயலாளர் தலைமையில் நடைபெற்றது.

