முன்பள்ளி சிறார்களுக்கான “கதை சொல்லும் நேரம்” போட்டியும் சிறுவர்தின நிகழ்வும்

எமது சபையின் கீழ் இயங்கும் மதவுவைத்தகுளம் சென் யூ லான் முன்பள்ளி சிறார்களுக்கு எமது சபையால் 02.10.2023 அன்று “கதை சொல்லும் நேரம்” போட்டி நடாத்தப்பட்டது.

இப்போட்டியில் சிறார்கள் மிகவும் ஆர்வத்துடன் மிக அழகாக தமது கதை கூறும் திறமையை வெளிக்காட்டியதோடு அனைத்து முன்பள்ளி சிறார்களுக்கும் எம்மால் பரிசுப்பொருட்களும் வழங்கப்பட்டது

சிறுவர் தின நிகழ்வு-ஓமந்தை முன்பள்ளி (02.10.2023)

எமது சபையின் கீழ் இயங்கும் ஓமந்தை முன்பள்ளியில் 02.10.2023 அன்றையதினம் சிறுவர் தினம் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்த சிறுவர்தின நிகழ்வில் எமது சபை செயலாளர் இஉத்தியோகத்தர்கள்இ ஊழியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு சிறுவர்களுக்கு எமது சபையால் புத்தகப்பைகள் மற்றும் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.