📙 நூல்கள் தொடர்பான கருத்தறிதல் 🔖📗

எமது சபையின் ஆளுகையின் கீழுள்ள ஓமந்தை மற்றும் கூமாங்குளம் பொதுநூலகங்களுக்கு வருடா வருடம் சபையின் நிதியொதுக்கீட்டில் நூல்கொள்வனவு செய்யப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இவ்வருடம் நூல்கொள்வனவுக்கென ஒதுக்கப்பட்ட நிதுயொதுக்கீட்டில் வாசகர்களின் தேவையை பூர்த்திசெய்யும் நோக்கில் வாசகர்களிடமும் நூல்கள் பற்றி கருத்தறிந்து அவர்களின் தேவையின் அடிப்படையில் நூல்கள் கொள்வனவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
எனவே வாசகர்களாகிய நீங்கள் உங்களுக்கு எவ்வாறான நூல்கள் அவசியம் மற்றும் அந்த நூல்கள் பற்றிய விபரங்களை எமக்கு 19.07.2024 ஆம் திகதிக்கு முன்னதாக எமக்கு தெரிவிக்கும் பட்சத்தில் அவ்வகை நூல்களை நாம் கொள்வனவு செய்து உங்களது தேவையை இலகுவாக்கமுடியும் என்பதனை அன்புடன் அறியத்தருகின்றோம்.
எம்மை தொடர்பு கொள்ள
அலுவலக தொலைபேசி:-0242225737
கூமாங்குளம் பொதுநூலகம்:-0242051781
ஓமந்தை பொதுநூலகம்:-0242052731
அலுவலக மின்னஞ்சல்:-npvstps@yahoo.com
அல்லது எமது அலுவலகத்திற்கு நேரடியாகவும் வருகை தந்து தங்களது புத்தக கோரிக்கையை சமர்ப்பிக்கலாம்.
நன்றி
தகவல்
செயலாளர்
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை

🎉பிரியாவிடை நிகழ்வு 🤝

எமது சபையில் அர்பணிப்பான சேவையாற்றி வேறு அலுவலகங்களுக்கு இடமாற்றம் பெற்றுச்சென்ற மற்றும் எமது சபையிலிருந்து விடைபெற்றுச்சென்ற உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு 28.06.2024 அன்றையதினம் பிற்பகல் 02.00 மணியளவில் எமது சபையின் ஊழியர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் சபையின் சபா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இப்பிரியாவிடை நிகழ்வில் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள்
திரு.எட்வேர்ட்-றொக்சன்
(அபிவிருத்தி உத்தியோகத்தர்)
திரு.சுப்பிரமணியம்-வரதகுமார்
(அபிவிருத்தி உத்தியோகத்தர்)
திருமதி.நாகேந்திரம்-பவித்திராயணி
(அபிவிருத்தி உத்தியோகத்தர்)
திருமதி.முகலாயன்-சங்கீதா
(அபிவிருத்தி உத்தியோகத்தர்)
திருமதி.லோகேஸ்வரன்-கோகிலவாணி
(முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்)
திருமதி.ஶ்ரீஸ்கந்தராஜா-றபேக்கா
(வருமானப்பரிசோதகர்)
திருமதி.பாத்திமா பஸ்னா றபிவுத்தீன்
(வருமானப்பரிசோதகர்)
திரு.கந்தசாமி-கிரிகரன்
(சுகாதாரத்தொளிலாளி)
இதுவரை காலமும் எமது சபையில் தமது அர்ப்பணிப்பான சேவையை வழங்கி வேறுஅலுவலகங்களுக்கு இடமாற்றலாகி சென்றிருக்கும் உத்தியோகத்தர்களின் பணி மென்மேலும் சிறக்கவும் சபையிலிருந்து விடைபெற்றுச்சென்ற உத்தியோகத்தர்களின் எதிர்காலம் சிறப்புடன் அமையவும் எமது சபை சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு இவர்கள் எமது சபையில் ஆற்றிய அர்ப்பணிப்பான சேவைக்கு எமது மனமாரந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பிரியாவிடை நிகழ்வின் பதிவுகள்.

நடமாடும் சேவை மற்றும் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்

தற்சமயம் எமது நடமாடும் சேவை மற்றும் இலவச மருத்துவமுகாம் தோணிக்கல் கிராம அபிவிருத்திச்சங்க கட்டடத்தில் நடைபெற்று வருகின்றது.   இன்று பிற்பகல் 03.30 மணிவரை இந்நடமாடும் சேவை நடைபெறும்.

பிரியாவிடை நிகழ்வு-(29.05.2024)

இதுவரை காலமும் எமது சபையில் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றி ஓய்வுபெற்றுச்செல்லும் திரு.சிவஞானம் அவர்களின் பிரிவுபசார நிகழ்வு எமது சபையால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.
அந்தவகையில் இன்றையதினம்(29.05.2024) மாலை 3.00 மணியளவில் எமது சபையின் சபாமண்டபத்தில் எமது சபை செயலாளர் தலைமையில் மேற்படி பிரிவுபசார நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் எமது சபை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
 

வாகன சுத்திகரிப்புநிலையம் மற்றும் இயந்திரவியல் முற்றம் திறப்புவிழா

உள்ளூர் பொருளாதார அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக வறுமை மட்டத்தை குறைத்தல் எனும் கருப்பொருளின் கீழ் இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனம்,பொதுநலவாய உள்ளூராட்சி மன்றங்களின் இணையம்,ஐக்கிய இராச்சியத்தின் சர்வதேச அபிவிருத்தி திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையால் பேயாடிகூழாங்குளத்தில் நிர்மாணிக்கப்பட்ட வாகன சுத்திகரிப்புநிலையம் மற்றும் இயந்திரவியல் முற்றம் ஆகியன 18.08.2023 பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டன.

 

இந்த வாகனசுத்திகரிப்பு நிலையம் மற்றும் இயந்திரவியல் முற்றம் ஆகியன உருவாக்கம் பெறுவதற்கு காரணகர்த்தாவாக இருந்த மறைந்த எமது சபையின் முன்னாள் தவிசாளர் கௌரவ.துரைச்சாமி-நடராஜசிங்கம் அவர்களை இந்த நேரத்தில் நாம் நன்றிகளுடன் நினைவு கூருகின்றோம்.

 

அத்துடன் இந்த வாகன சுத்திகரிப்பு நிலைய செயற்றிட்டத்திற்கான நிதியீட்டத்தினை பெற்றுக்கொள்வதற்கு எமக்கு உறுதுணையாக நின்ற இலங்கை உள்ளூராட்சி மன்ற இணையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.சண்முகராஜா அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.